/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க. - பா.ஜ. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க. - பா.ஜ. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 11, 2025 10:11 PM
சூலுார்; ''சூலுார் தொகுதி எப்போதும் அ.தி.மு.க.,கோட்டையென நிரூபிக்க வேண்டும்,'' என, எம்.எல்.ஏ., கந்தசாமி பேசினார்.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னியம்பாளையம், நீலம்பூர், கணியூர், வாகராயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், அ.தி.மு.க., - பா.ஜ., ஆலோசனை கூட்டம் நடந்தது. சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி தலைமை வகித்து பேசுகையில், வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவது உறுதி. பொதுச்செயலாளர் பழனிசாமி தொகுதிவாரியாக பிரசாரம் செய்து வருகிறார். வரும், 13ம் தேதி சூலுாரில் பிரசாரம் செய்கிறார். அதில், அனைவரும் கலந்து கொண்டு, சூலுார் தொகுதி எப்போதும் அ.தி.மு.க., கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும், என்றார்.
சின்னியம்பாளையம் பா.ஜ., நிர்வாகிகள், எம்.எல்.ஏ., விடம், 'சின்னியம்பாளையம் அவிநாசி ரோட்டில், யு டேர்ன் அடைக்கப்பட்டதால், மக்கள் ரோட்டை கடக்க, ஒரு கி.மீ., தூரம் சுற்றி வரவேண்டி உள்ளது. அதனால், முடங்கி கிடக்கும் சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, அந்த இடத்தில் உள்ள தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., உறுதி அளித்தார்.