/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்ப்பாட்டத்துக்கு முயன்ற அ.தி.மு.க. -- பா.ஜ.வினர் கைது
/
ஆர்ப்பாட்டத்துக்கு முயன்ற அ.தி.மு.க. -- பா.ஜ.வினர் கைது
ஆர்ப்பாட்டத்துக்கு முயன்ற அ.தி.மு.க. -- பா.ஜ.வினர் கைது
ஆர்ப்பாட்டத்துக்கு முயன்ற அ.தி.மு.க. -- பா.ஜ.வினர் கைது
ADDED : நவ 11, 2025 10:59 PM

போத்தனூர்: கோவைபுதூரில் வீட்டுவசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில், 6.24 ஏக்கர் பரப்பளவு இடம், காமராஜர் காலத்தில், மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்டது. மருத்துவமனை கட்டப்படாததால், அப்பகுதியை சேர்ந்தோர் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இவ்விடத்தில் கட்டடங்கள் கட்ட தனியாருக்கு ஒப்பந்தம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று இதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. இதனை கண்டித்து, அ.தி.மு.க.- - பா.ஜ. கட்சியினர் மற்றும் கோவைபுதூரில் வசிப்போர் இணைந்து, நேற்று இடையர்பாளையம் பிரிவு அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கூடினர்.
போலீசார் அனுமதி மறுத்தனர். தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டனர். தொடர்ந்து, குனியமுத்தூர் பகுதி கழக செயலாளர் மதனகோபால் மற்றும், 12 பெண்கள் உள்பட, 79 பேரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் குறித்து தகவலறிந்த தி.மு.க.வினர், நேற்று முன்தினம் இரவோடு, இரவாக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் புகைப்படத்துடன், 'மைதானத்தை மீட்டுக் கொடுத்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி' என குறிப்பிட்டு பேனர் வைத்துள்ளனர். இது அ.தி.மு.க. வினரை அதிர்ச்சியடைய செய்தது.

