/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திண்ணை பிரசாரத்தை துவங்கியது அ.தி.மு.க.,
/
திண்ணை பிரசாரத்தை துவங்கியது அ.தி.மு.க.,
ADDED : ஜூலை 02, 2025 09:42 PM

பொள்ளாச்சி; கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில், பொள்ளாச்சி நகரில், திண்ணை பிரசாரம் நேற்று துவங்கியது. எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்து, துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.
ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் விஜயகுமார் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், பாபு, செந்தில் முன்னிலை வகித்தனர்.
திண்ணை பிரசாரத்தின் போது, தி.மு.க., அரசின் நிர்வாக தோல்வியால் தொடரும் குற்றங்கள் என்ற தலைப்பிலான துண்டு பிரசுரங்களை வழங்கினர். தமிழகத்தில், இதுவரை, ஏழாயிரம் கொலைகள் இந்த ஆட்சியில் நடந்துள்ளன. யாருக்கும் பாதுகாப்பில்லை எனக்கூறி, பொதுமக்களிடம் தி.மு.க., ஆட்சியின் அவலம் குறித்தும், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்தும் விளக்கினர்.
கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, அ.தி.மு.க., அவைத்தலைவர் செல்வகுமார், ஜெ., பேரவை இணை செயலாளர் ஸ்ரீதர், நிர்வாகிகள் அருணாச்சலம், கனகராஜ் பங்கேற்றனர்.