/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கரை நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க., --- பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
மதுக்கரை நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க., --- பா.ஜ., ஆர்ப்பாட்டம்
மதுக்கரை நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க., --- பா.ஜ., ஆர்ப்பாட்டம்
மதுக்கரை நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க., --- பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 02, 2025 07:03 AM
போத்தனூர்; கோவை மதுக்கரை நகராட்சியில் தளவாட பொருட்கள், பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவற்றை, சந்தை விலைக்கு வாங்க கோரி, அ.தி.மு.க.,--- பா.ஜ.,வினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கரை நகராட்சியில், 2023--2024ம் ஆண்டில் பொது சுகாதார பிரிவிற்கு தேவையான தளவாடம் மற்றும் கிருமிநாசினி பொருட்கள் வாங்கி இருப்பு வைக்க, 2023 ஜூன், 28ல் டெண்டர் விடப்பட்டது.
அதில் பிளீச்சிங் பவுடர், 1025, எல்.இ.டி. பல்பு, 4,050, கடப்பாறை இரண்டாயிரம் ரூபாய்க்கும் வாங்கப்பட்டுள்ளன.
இவ்விலைகள் சந்தை விலையை காட்டிலும், அதிகம் எனவும் இவ்வாண்டு டெண்டர் விடும்போது நியாயமான விலைக்கு வாங்கவேண்டும் எனவும் வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது நகராட்சி கமிஷனர் சத்யாவிடம் இதுகுறித்து புகார் கூறினர். மேலும் தலா ஒரு கடப்பாறை மற்றும் மண்வெட்டி, 25 கிலோ பிளீச்சிங் பவுடர், இரு எல்.இ.டி., பல்புகள் ஆகியவற்றை, நகராட்சி அலுவலகத்திற்குள் வைத்தனர்.
30 நிமிடங்கள் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மதுக்கரை நகர அ.தி.மு.க., துணை செயலாளர் ஜோசப் தலைமை வகித்தார். மதுக்கரை நகர பா.ஜ., தலைவர் செந்தில்குமார் உள்பட, 25 பேர் பங்கேற்றனர்.
மதுக்கரை நகர அ.தி.மு.க., துணை செயலாளர் ஜோசப் கூறியதாவது:
வெளிச்சந்தையில் பிளீச்சிங் பவுடர் கிலோ, 290, கடப்பாறை ஒன்று ஆயிரம், எல்.இ.டி. பல்பு ஒன்று, 593 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆனால் நகராட்சியில் பல மடங்கு, அதிக விலைக்கு வாங்கி கொள்ளையடித்து வருகின்றனர். கட்டுமான பொருட்கள் விலை, 200 மடங்கு அதிகரித்துள்ளது.
நகராட்சியில் எந்தவொரு அப்ரூவல் வாங்கவும், 50 முதல் 80 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், 'கூகுள்-பே' வாயிலாக வாங்கிக்கொண்ட பின்னரே அனுமதி தருகின்றனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

