/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகரசபை கூட்டத்தை புறக்கணிக்கும் அ.தி.மு.க.
/
நகரசபை கூட்டத்தை புறக்கணிக்கும் அ.தி.மு.க.
ADDED : அக் 27, 2025 10:40 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியில் 9 வார்டுகளில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் நடத்தப்படும் நகர சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக நகராட்சி கமிஷனர் அமுதாவிடம் மனு அளித்தனர்.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது இதுவரை தீர்வு காணப்படவில்லை. நகர சபை கூட்டத்தின் போது, அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தர வேண்டும். தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில், மக்களை ஏமாற்றும் விதமாக இந்த நகர சபை கூட்டத்தை நடத்தி மனுக்களை பெற்றுக் கொண்டு ஏமாற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆகிய நாங்கள் தயாராக இல்லை. அத்துடன் இந்த ஆட்சியின் பதவிக்காலம் இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் எதுவும் நடக்கப் போவதில்லை. எனவே இந்த நகர சபை கூட்டத்தை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிக்கிறோம், என்றனர்.-

