/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரைம் செய்திகள்: கஞ்சா விற்ற இருவர் சிறையில் அடைப்பு
/
கிரைம் செய்திகள்: கஞ்சா விற்ற இருவர் சிறையில் அடைப்பு
கிரைம் செய்திகள்: கஞ்சா விற்ற இருவர் சிறையில் அடைப்பு
கிரைம் செய்திகள்: கஞ்சா விற்ற இருவர் சிறையில் அடைப்பு
ADDED : அக் 27, 2025 10:41 PM
கஞ்சா விற்ற இருவர் சிறையில் அடைப்பு சூலூர் போலீசார், பாப்பம்பட்டி பிரிவு சுற்று வட்டார பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில், சென்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனை செய்ததில், 500 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், விருதுநகர் மாவட்டம் சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த ரோகன், 25, திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை சேர்ந்த மணிகண்டன், 25 என்பதும், இருவரும் பள்ளபாளையத்தில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருவதும், மீதி நேரங்களில் கஞ்சா விற்பதும் தெரிந்தது. ரோகன் மீது கருமத்தம்பட்டி, காட்டூர், சூலூர், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரிந்தது. இதேபோல் மணிகண்டன் மீது காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா வழக்கு உள்ளது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பணம் திருட்டு சூலூர் அடுத்த குரும்பபாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம், 29. தனியார் நிறுவன உரிமையாளர். இவர் சம்பவத்தன்று இரவு தனது அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை அலுவலகத்தை திறந்த போது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்து, 5 ஆயிரத்து, 500 ரூபாய் பணம் திருடப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து அவர் சூலூர் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், பணம் திருடிய நபரை தேடி வருகின்றனர்.
காற்றாலை இயந்திரத்தில் தீ விபத்து சூலூர் அருகே காற்றாலை இயந்திரத்தில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சூலூர் அடுத்த செலக்கரச்சல் கிராமத்தில், ஏராளமான தனியார் காற்றாலை இயந்திரங்கள் செயல்படுகின்றன. நேற்று காலை ஒரு காற்றாலை இயந்திரத்தின் மேற்பகுதியில் திடீரென தீப்பிடித்து. காற்றின் வேகத்தில் இறக்கைகளுக்கும் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது.

