ADDED : மார் 23, 2026 09:40 PM
அ நிறம் | அளவு
கோவை: கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., அருண்குமார் மார்ச் 24ல் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார். சட்டசபை தேர்தலுக்கு தே.ஜ.,கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நேற்று நிறைவடைந்தது.
இதையடுத்து கவுண்டம்பாளையம் தொகுதியின் தற்போதைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ., அருண்குமார் கஸ்துாரிநாயக்கன்பாளையம், கணுவாய், பாப்பநாயக்கன்பாளையம், வரப்பாளையம், பன்னீர்மடை பகுதிகளில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவு திரட்டுகிறார்.
