தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிரசாரம் துவக்கினார் அ.தி.மு.க., வேட்பாளர்

 பிரசாரம் துவக்கினார் அ.தி.மு.க., வேட்பாளர்

 பிரசாரம் துவக்கினார் அ.தி.மு.க., வேட்பாளர்


ADDED : ஏப் 01, 2026 10:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 10:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சின்னராஜ், முதல் கட்ட பிரச்சாரத்தை, நேற்று சிறுமுகை அருகே மூளையூரில் துவக்கினார்.

அ.தி.மு.க., --- பா.ஜ., -- அ.ம.மு.க., உட்பட கூட்டணி கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் வரவேற்றனர். பிரச்சார வாகனம் வாயிலாக, மூளையூர், கூத்தாமண்டி பிரிவு, சிறுமுகை நகர் பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில், மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.

அவர் பேசுகையில், ''தி.மு.க., ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி. இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மக்கள் மனநிலையை உணர்ந்து பணியாற்றிவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரது ஆட்சி பொற்கால ஆட்சி,'' என்றார்.

மேட்டுப்பாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜ், பா.ஜ., தொகுதி பொறுப்பாளர் சதீஸ்குமார், வடக்கு மாவட்ட துணை தலைவர் சக்திவேல், மேட்டுப்பாளையம் நகர தலைவர் சரவணக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us