/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி; அதிகாரிகள் மீது அ.தி.மு.க., புகார்
/
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி; அதிகாரிகள் மீது அ.தி.மு.க., புகார்
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி; அதிகாரிகள் மீது அ.தி.மு.க., புகார்
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி; அதிகாரிகள் மீது அ.தி.மு.க., புகார்
ADDED : நவ 26, 2025 05:43 AM

வால்பாறை: வால்பாறையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில், ஆளும்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக, அ.தி.மு.க.,வினர் புகார் தெரிவித்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி கடந்த, 4ம் தேதி முதல் நடக்கிறது. வால்பாறை மலைப்பகுதியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவம் விநியோகித்து வருகின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் திரும்ப பெறும் பணியும் தற்போது நடந்தது வருகிறது.
இந்நிலையில், வால்பாறை அ.தி.மு.க., நகர செயலாளர் மயில்கேணஷ், துணை செயலாளர் பொன்கணேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து புகார் தொரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
ஓட்டுச்சாவடி அலுவலர்களை தி.மு.க.,வினர் வசப்படுத்தி, அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று விநியோகம் செய்கின்றனர். வால்பாறையில் இருந்து வெளியூர் சென்ற வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. அவர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.
இதன் வாயிலாக, தி.மு.க.,வினர் போலியான வாக்காளர்களை இடம் பெற செய்து, தேர்தலில் கள்ள ஓட்டு போட தயாராகி வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம்.
இவ்வாறு, கூறினர்.
அ.தி.மு.க.,வினரின் புகார் குறித்து உரிய முறையில் விசாரிப்பதாக தேர்தல் அதிகாரிகள் கூறியதையடுத்து, கலைந்து சென்றனர்.

