/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலையில் பனிமூட்டம்: சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
/
மலையில் பனிமூட்டம்: சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
ADDED : நவ 26, 2025 05:44 AM

வால்பாறை: சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வால்பாறையில் படரும் பனிமூட்டத்தை சுற்றுலாபயணியர் கண்டு ரசித்தனர்.
வால்பாறையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்கிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் இரவு நேரத்தில் கடுங்குளிரும், பகல் நேரத்தில் பனிமூட்டமும் நிலவுகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வால்பாறையில் பல்வேறு வகையான பூக்கள் சாலையோரம் பூத்துக்குலுங்குகின்றன. வசீகரிக்கும் வகையில் பூத்துள்ள பூக்களை சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை சாரல் மழையாக பெய்வதால், குளுகுளு சீசன் நிலவுகிறது. சுற்றுலா பயணியரை மேலும் மகிழ்ச்சியூட்டும் வகையில் எஸ்டேட் பகுதியில் பனிமூட்டம் படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் காலை, மாலை நேரங்களில் படரும் பனிமூட்டத்தை சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.

