/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 08, 2025 10:02 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அ.தி.மு.க. நகர அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பொள்ளாச்சியில், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு வரவேற்பு அளிப்பது குறித்து, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நகர அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்து பேசுகையில், ''தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்பது நிச்சயம்,'' என்றார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று 9ம் தேதி பொள்ளாச்சிக்கு வருகிறார். 10ம் தேதி கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். ஒவ்வொரு வார்டில் இருந்தும் மக்கள் அதிகளவு பங்கேற்க வைக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் சுப்பரமணியம், கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, நகர நிர்வாகிகள் அருணாச்சலம், கனகராஜ், முபாரக் பங்கேற்றனர்.