/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் அ.தி.மு.க., கள ஆய்வுக் கூட்டம்
/
கோவையில் அ.தி.மு.க., கள ஆய்வுக் கூட்டம்
ADDED : நவ 29, 2024 07:22 AM

கோவை : கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கள ஆய்வுக் குழு கூட்டம், கோவை, சுங்கம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.
அ.தி.மு.க.,வில் கிளை, வார்டு, வட்டம், சார்பு அணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, கட்சி பொதுச் செயலாளர் பழனிசாமி, 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் கொண்ட இக்குழு, கட்சி அமைப்பு ரீதியான மாவட்டங்களில் ஆலோசனை நடத்தி ஆய்வு செய்து வருகிறது. நேற்று, கோவை, சுங்கம் பகுதியில் கள ஆய்வுக் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.பி., ஜெயவர்தன், எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ச்சுனன், ஜெயராம், முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நேற்று கோவையில் நடந்த கள ஆய்வுக் கூட்டத்தில், ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
எனினும் 'இதர மாவட்டங்களைப் போல, பெரிய அளவில் எந்த குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை. சீனியர்களை புறக்கணிக்கக்கூடாது. கட்சிக் கூட்டங்களுக்கும், இதர நிகழ்வுகளுக்கும் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என்பதுதான் பிரதானமாக வலியுறுத்தப்பட்டது என, கட்சியினர் தெரிவித்தனர்.

