/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் நடைபயணம் 7ம் தேதி துவக்கம்
/
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் நடைபயணம் 7ம் தேதி துவக்கம்
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் நடைபயணம் 7ம் தேதி துவக்கம்
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் நடைபயணம் 7ம் தேதி துவக்கம்
ADDED : ஜூலை 02, 2025 10:14 PM

மேட்டுப்பாளையம்; அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளிலும், நடைபயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதன் துவக்க நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் தொகுதியில், வருகிற,7ம் தேதி நடைபெற உள்ளது. வனபத்ரகாளியம்மன் கோவிலில் அவர் சாமி கும்பிட்ட பின், அங்குள்ள மண்டபத்தில் விவசாயிகளையும், கைத்தறி நெசவாளர்களையும் சந்தித்து குறைகளை கேட்க உள்ளார். மாலை, 4:00 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் ஊட்டி சாலையில் அரசு மருத்துவமனை அருகே இருந்து, பழனிசாமி நடை பயணத்தை துவக்கி, கோ-ஆபரேட்டிவ் காலனியிலும், காரமடையிலும் பேச உள்ளார். அதன் பிறகு கவுண்டம்பாளையம் தொகுதிக்கு செல்ல உள்ளார்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு வரவேற்பு கொடுப்பது குறித்து, காரமடை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, எஸ்.புங்கம்பாளையம் கிளை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமை வகித்தார்.
காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் வரவேற்றார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ், மாவட்ட துணைச் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் பொன்னுசாமி, உள்பட பலர் பேசினர்.
கூட்டத்தில் கிளை நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர். ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் பூபதி குமரேசன் நன்றி கூறினார்.