/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜெ., நினைவுதினம் அனுசரித்த அ.தி.மு.க.
/
ஜெ., நினைவுதினம் அனுசரித்த அ.தி.மு.க.
ADDED : டிச 06, 2025 06:03 AM

கோவை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின், 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கோவையில் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க., மாவட்ட தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இருந்து, ஊர்வலமாக சென்ற கட்சியினர், அவிநாசி சாலையில் உள்ள ஜெ., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கும் மரியாதை செலுத்தினர்.
பின்னர், கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெ., உருவப்படத்துக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். எம்.எல்,.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், ஜெயராம், முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி மற்றும் மாவட்ட, கிளைக்கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

