/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகல்நேர மையங்களில் கண்கவர் கலைநிகழ்ச்சி
/
பகல்நேர மையங்களில் கண்கவர் கலைநிகழ்ச்சி
ADDED : டிச 06, 2025 06:04 AM

கோவை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாவட்டத்தில் உள்ள பகல்நேரப் பாதுகாப்பு மையங்களில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களின், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோவையில் 1 முதல் பிளஸ் 2 வரை சுமார் 3,500க்கும் அதிகமான மாற்றுத்திறன் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில், கூடுதல் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்காக மாவட்டத்தின் 15 வட்டாரங்களிலும், பகல் நேரப் பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அனைத்து மையங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, பெரிய கடை வீதி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மையத்தில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஆசிரியரின் சைகைகளுக்கு ஏற்ப செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்கள் நிகழ்த்திய நடனம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

