/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடுப்பு சரியில்லாததால் மயானத்தில் மக்கள் அவதி
/
அடுப்பு சரியில்லாததால் மயானத்தில் மக்கள் அவதி
ADDED : டிச 06, 2025 06:04 AM
போத்தனூர்: போத்தனூர் -- செட்டிபாளையம் சாலையில், மாநகராட்சி 100வது வார்டில் எரிவாயு மயானம், ஈஷா அமைப்பின் பராமரிப்பில் உள்ளது. சுமார், ஏழு கி.மீ. சுற்றளவில் யாரேனும் இறந்தால், சடலத்தை இங்கு வந்து எரியூட்டி செல்வர்.
குறிப்பாக ஆத்துபாலம், நஞ்சுண்டாபுரம் மயானங்களில் எரியூட்ட நேரம் கிடைக்காதபோது, மக்கள் இம்மயானத்திற்குதான் வருவர்.
இந்நிலையில் சடலம் எரியும்போது, புகையை வெளியேற்றும் 100 அடி உயர சிம்னி பல மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. சடலம் எரியூட்டுவதில் பிரச்னை ஏற்பட்டது. ஒரு மாதம் முன்பு சிம்னி மாற்றப்பட்டது. ஆனால் அடுப்பை சீரமைக்கவில்லை.
அதனால் சடலங்களை எரியூட்ட, வேறு இடம் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. “அடுப்பை சரி செய்ய 2 நாள் போதும். ஈஷா அமைப்பு அதை செய்து தருவதில் சிக்கல் இருந்தால், மாநகராட்சியே செய்ய வேண்டும்” என மக்கள் கூறுகின்றனர்.

