/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயரழுத்த மின் கம்பி குறுக்கிடுவதால் சாயிபாபா காலனி பாலத்துக்கு சிக்கல்
/
உயரழுத்த மின் கம்பி குறுக்கிடுவதால் சாயிபாபா காலனி பாலத்துக்கு சிக்கல்
உயரழுத்த மின் கம்பி குறுக்கிடுவதால் சாயிபாபா காலனி பாலத்துக்கு சிக்கல்
உயரழுத்த மின் கம்பி குறுக்கிடுவதால் சாயிபாபா காலனி பாலத்துக்கு சிக்கல்
ADDED : டிச 06, 2025 06:04 AM

சாயிபாபா காலனி: கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் சாயிபாபா காலனியில் கங்கா மருத்துவமனை முன் துவங்கி பஸ் ஸ்டாண்ட் வரை 1,140 மீட்டர் நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது. மருத்துவமனை முன் சாய்வு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பாலத்தின் குறுக்கே உயரழுத்த மின் ஒயர் கடந்து செல்வதால், கான்கிரீட் கர்டர்கள் துாக்கி வைத்து ஓடுதளம் அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண, மின்வாரியத்தினரும், தேசிய நெடுஞ்சாலைத்துறையினரும் கள ஆய்வு செய்தனர்.
அண்ணா மார்க்கெட் வளாகத்தில் புதிதாக உயர் கோபுரம் அமைத்து, பாலத்தின் அருகே உள்ள கோபுரத்தில் இருந்து, 8.5 மீட்டர் உயரத்தில் உயரழுத்த மின் ஒயர்கள் செல்லும் வகையில் இணைப்புகளை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. மின் வாரியத்தினர் மேற்பார்வையில் இப்பணி மேற்கொள்ளப்படும்.
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாய்வு தளம் அமைக்கும்போது, தற்போது வாகனங்கள் சென்று வரும் வழித்தடங்கள் சுருங்கி விடும்.
அதனால், நில அளவீடு செய்து, வாகனங்கள் சீராக செல்ல வழியேற்படுத்திக் கொடுத்து விட்டு, சாய்வு தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'அண்ணா மார்க்கெட் வளாகத்தில் புதிதாக உயரழுத்த மின் கோபுரம் அமைக்க மாநகராட்சி இடம் தருகிறது. அங்குள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்படுகிறது. மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல 5.5 மீட்டர் உயரத்துக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது. உயரழுத்த மின் இணைப்பு என்பதால், 8.5 மீட்டர் உயரத்தில் கொண்டு செல்ல மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. மின்வாரியத்தினர் மேற்பார்வையில், அப்பணி விரைவில் துவங்கும். ஒப்பந்த நிறுவனத்தினருக்கு 24 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்' என்றனர்.

