/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதுமைப்பெண், தமிழ்புதல்வனில் பயனடைந்தோர் 1.27 லட்சம் பேர்
/
புதுமைப்பெண், தமிழ்புதல்வனில் பயனடைந்தோர் 1.27 லட்சம் பேர்
புதுமைப்பெண், தமிழ்புதல்வனில் பயனடைந்தோர் 1.27 லட்சம் பேர்
புதுமைப்பெண், தமிழ்புதல்வனில் பயனடைந்தோர் 1.27 லட்சம் பேர்
ADDED : டிச 06, 2025 06:05 AM
கோவை: மாவட்டத்தில் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தில் பயனடைந்தோரின் எண்ணிக்கை, 1,27,000 கடந்து விட்டது.
கடந்த நான்கரை ஆண்டுகளில், மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வாயிலாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், 70,648 மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், 56,430 மாணவர்கள் வீதம் மொத்தம் 1,27,078 பேர் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தில்உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் பயனடையாமல் இருந்தால், அவர்கள் தங்களை இத்திட்டத்தில் இணைத்து பயனடையலம்.அந்தந்த கல்லுாரி முதல்வர்களை, மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று, மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.