/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜெ., நினைவு தினம் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
/
ஜெ., நினைவு தினம் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
ADDED : டிச 06, 2024 04:50 AM

கோவை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அ.தி.மு.க.,வினர் நினைவஞ்சலி செலுத்தினர்.
கோவை, மாவட்ட அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து, மாநகர் மாவட்டத் தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான அம்மன் அர்ச்சுனன், எம்.எல்.ஏ., ஜெயராம், முன்னாள் மேயர் செ.மா. வேலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கருப்புச் சட்டை அணிந்து, அவிநாசி சாலையில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலையை நோக்கி ஊர்வலம் சென்றனர்.
அங்கு மூவரின் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின், அவர்களின் புகழை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் ஜெ., உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், 'மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியை மீண்டும் அமைத்திடுவோம்' என, அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்றனர்.
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.