/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
/
காரமடை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
காரமடை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
காரமடை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 05, 2025 11:18 PM

மேட்டுப்பாளையம்,; காரமடை நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் காரமடை கார் ஸ்டாண்ட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமை வகித்தார். அ.தி.மு.க.,வின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ.அருண்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ், நகர செயலாளர் ஆறுமுகசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ''காரமடை நகராட்சியின் மின் மயானம் பல மாதங்களாக செயல்படவில்லை, சந்தைக்கடை ஏலத்தில் முறைகேடு செய்து நகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது, சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை, தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கவில்லை, தரமற்ற தார்சாலை, துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை, நகராட்சியில் ஊழல் நடைபெறுகிறது'' என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.---