/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு தீர்மானங்களை ரத்து செய்யுங்கள் முதல்வருக்கு அ.தி.மு.க., வலியுறுத்தல்
/
இரு தீர்மானங்களை ரத்து செய்யுங்கள் முதல்வருக்கு அ.தி.மு.க., வலியுறுத்தல்
இரு தீர்மானங்களை ரத்து செய்யுங்கள் முதல்வருக்கு அ.தி.மு.க., வலியுறுத்தல்
இரு தீர்மானங்களை ரத்து செய்யுங்கள் முதல்வருக்கு அ.தி.மு.க., வலியுறுத்தல்
ADDED : மே 22, 2025 12:55 AM
கோவை, ;கோவை மாநகராட்சியில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு வைப்புத்தொகை மற்றும் மாதாந்திர கட்டணத்தை உயர்த்தி, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய, அ.தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, கோவை மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் அனுப்பியுள்ள கடிதம்:
சொத்து வரி, காலியிட வரி, கட்டட வரைபட அனுமதி, குடிநீர், மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடைநிலை பொதுமக்கள் ஈட்டும் வருமானத்தை, மாநகராட்சிக்கு வரியாகவே செலுத்த வேண்டியிருக்கிறது.
கடந்த, 14ம் தேதி மாமன்ற அவசர கூட்டத்தில், 103 தீர்மானங்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. 100 முதல், 103 வரையிலான தீர்மானங்கள், 'டேபிள் சப்ஜெக்ட்'டாக கொடுக்கப்பட்டது.
அதில், பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு வைப்புத்தொகை, மாதாந்திர கட்டணம் உயர்த்துவது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 101 மற்றும், 102வது தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டுமென, கோவை மக்கள் சார்பாகவும், அ.தி.மு.க., சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.
தற்போது கொடுக்கப்படும் இணைப்புகளுக்கு புதிய கட்டணமே வசூலிக்கப்படுகிறது; ஆய்வு செய்து பழைய கட்டணமே வசூலிக்க வேண்டும். 'ட்ரோன் சர்வே' எடுத்து, வீடுகளுக்கு பல மடங்கு வரி உயர்த்தப்பட்டிருக்கிறது; 'ட்ரோன்' மூலம் கணக்கெடுத்து உயர்த்திய வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி என்பது மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பு; லாபம் ஈட்டும் தனியார் நிறுவனம் போல் செயல்படுகிறது.
இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.