/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2026-ல் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி: வேலுமணி உறுதி
/
2026-ல் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி: வேலுமணி உறுதி
ADDED : ஏப் 01, 2025 06:48 AM
போத்தனுார்: கோவை, குனியமுத்தூர் அடுத்து சுகுணாபுரத்தில், அ.தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தலை, முன்னாள் அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார். அப்போது அவர் பத்திரிகை யாளர்களுக்கு அளித்த பேட்டி:
எந்தவொரு மக்கள் நலத்திட்டம் ஆனாலும், அது அ.தி.மு.க.,வால்தான் மேற்கொள்ளப்படும். அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மாவட்டத்தில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
தற்போது தி.மு.க.. ஆட்சியில், கடந்த நான்காண்டுகளாக கோவை மாவட்டம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.
2026-ல் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைவது உறுதி. அப்போது இங்கு விடுபட்ட திட்டங்களும், தி.மு.க., செய்யாத திட்டங்களும் நிறைவேற்றப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

