/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பத்து நாட்களில் வேலை நடக்காவிடில் அ.தி.மு.க., போராட்டம் நடத்தும்'
/
'பத்து நாட்களில் வேலை நடக்காவிடில் அ.தி.மு.க., போராட்டம் நடத்தும்'
'பத்து நாட்களில் வேலை நடக்காவிடில் அ.தி.மு.க., போராட்டம் நடத்தும்'
'பத்து நாட்களில் வேலை நடக்காவிடில் அ.தி.மு.க., போராட்டம் நடத்தும்'
ADDED : மே 26, 2025 11:53 PM
கோவை : ''எங்களது கோரிக்கைகளின் மீது, பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கோவையில் பிரம்மாண்டபோராட்டம் நடத்தப்படும்,'' என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறினார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், ஒன்பது பேர் மற்றும் கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோருடன் நேற்று, கலெக்டரை சந்தித்து மனு அளித்தார்.
அதன் பின், வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை மாநகராட்சி அபரிமிதமாக உயர்த்திய, சொத்துவரியையும், குடிநீர் கட்டணத்தையும் குறைக்க வேண்டும். சமீபத்தில் உயர்த்தப்பட்ட சொத்துவரி மீது, மேலும் 6 சதவீதம் சொத்துவரி உயர்த்தியுள்ளதை, திரும்ப பெற வேண்டும்.
குப்பைக்கு வரி மற்றும் அபராத வரி போன்ற வரிகளை ரத்து செய்ய வேண்டும். மழையால் அனைத்து சாலைகளிலும், தண்ணீர் தேங்கி நிற்கிறது. குண்டும் குழியுமாக உள்ளதால், போக்குவரத்து சீராக இல்லை.
நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுக்கிறது. வடிகால் வசதிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. காட்டு யானைகள் தொல்லை அதிகரித்துள்ளது. தடுக்க இரும்பு தடுப்புவேலி அமைக்க வேண்டும். மண் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறுவாணி தண்ணீரை, கேரள அரசு உபரிநீர் வெளியேறும் பாதை வழியாக அடிக்கடி திறந்து விடுகிறது. இதை தடுக்க வேண்டும்.
எங்களது கோரிக்கை மீது, பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, வேலுமணி கூறினார்.