/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.முக.வின் 54வது ஆண்டு விழா உற்சாகம்
/
அ.தி.முக.வின் 54வது ஆண்டு விழா உற்சாகம்
ADDED : நவ 03, 2025 01:18 AM

கோவை: மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், அ.தி.மு.க., வின் 54வது ஆண்டு விழா, சவுரிபாளையத்தில் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் கணேஷ் குமார் தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி, மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மாணவரணி மாநில செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
எம்.எல்.ஏ., ஜெயராம் பேசுகையில், “கிராமம்தோறும் வி.ஏ.ஓ.,க்கள் நியமன், புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள், பல்கலைகள், நகர்ப்புற குடிநீர் திட்டங்கள் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியவர் எம்.ஜிஆர்., சட்டம் -- ஒழுங்கு கட்டுக்குள் இருந்தது. தற்போது, பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா விற்கப்படுகிறது. சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். மக்கள் விரோத தி.மு.க., ஆட்சிக்கு வரும் தேர்தலில் முடிவு கட்டுவோம்,” என்றார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

