ADDED : ஏப் 04, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தொகுதியில் கடந்த 5 தேர்தல்களில் (2001, 06, 11, 16, 21) அ.தி.மு.க.தான் வென்றுள்ளது.
ஓ.கே. சின்னராஜ் 3 முறை, ஏ.கே. செல்வராஜ் 2 முறை வெற்றி பெற்றுள்ளனர். இருவருமே பிரம்மசாரிகள். ஒவ்வொரு முறையும் வேட்பாளரை மாற்றியும் தி.மு.க.வால் ஜெயிக்கவே முடியவில்லை.
அக்கட்சி நிறுத்திய அனைவரும் திருமணம் ஆனவர்கள். இதனால், மேட்டுப்பாளையம் மக்கள் பிரம்மசாரிகளுக்குதான் ஆதரவு தருகிறார்கள் என்ற பிம்பம் உருவானது.
அதே பேச்லர் சென்டிமென்டுடன் இம்முறையும் ஓ.கே. சின்னராஜை களமிறக்கியுள்ளது இரட்டை இலை கட்சி.
