/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திண்ணை பிரசாரம்; அ.தி.மு.க., தீவிரம்
/
திண்ணை பிரசாரம்; அ.தி.மு.க., தீவிரம்
ADDED : ஜூலை 17, 2025 10:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை; ஆனைமலை அருகே, கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில், திண்ணை பிரசாரம் நடந்தது.
கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில், திண்ணை பிரசாரம் ஆனைமலையில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஜெ.,பேரவை மாவட்ட செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., கஸ்துாரி, மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் மற்றும் ஒன்றிய செயலாளர் பிரகதீஷ், பேரூராட்சி செயலாளர் குணசீலன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மக்களை காப்போம், தமிழகம் மீட்போம் என்ற தலைப்பிலான நோட்டீஸ்களை வழங்கினர்.