/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் 'ஏஐசி ரைஸ்'
/
பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் 'ஏஐசி ரைஸ்'
ADDED : டிச 12, 2024 06:16 AM
கோவை; கோவையில் அமைந்துள்ள அடல் இன்குபேஷன் சென்டர் ரைசானது ( ஏ.ஐ.சி., ரைஸ்) பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க, தமிழக அரசின் அமைப்பான ஊரக இன்குபேட்டர் மற்றும் ஸ்டார்ட்அப் செயல்பாட்டாளர்களான டின்.ரைஸ் உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சென்னையில் அமைந்துள்ள டி.ன். ரைஸின் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடந்தது. இதன்மூலம், ஏ.ஐ.சி., ரைஸ் மற்றும் டின்.ரைஸ் இணைந்து, பெண்கள் மற்றும் ஊரக பகுதி தொழில் முனைவோர்களுக்கு, தேவையான வழிகாட்டுகள் மற்றும் நிதியுதவிகளை வழங்கும்.
ஏ.ஐ.சி., ரைசின் துணைத் தலைவர் நாகராஜ் மற்றும் இன்குபேஷன் மற்றும் நிர்வாக இணை துணைத் தலைவர் பிரதீப் ராஜ், டி.ன்.ரைஸ் சார்பில் தலைமை நிர்வாக அதிகாரி உமா மகேஸ்வரி மற்றும் டின். ரைஸ் திட்ட மேலாளர் சக்தி பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் முன்னெடுப்பாக, வரும் 18 அன்று பெண் தொழில் முனைவோர்களுக்காக ஏ.ஐ.சி., ரைசில் சிகரம் எனும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இதில், ஸ்டார்ட் -அப்களுக்கு தேவையான வழிகாட்டுதல், சந்தைப்படுத்துதல் மற்றும் நிதி உதவி ஆகியவை வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள பெண் ஸ்டார்ட் -அப் நிறுவனர்கள் பங்கேற்று பயனடையலாம்.