/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு உதவி பொருட்கள்
/
துாய்மை பணியாளர்களுக்கு உதவி பொருட்கள்
ADDED : அக் 21, 2025 12:42 AM

மேட்டுப்பாளையம்: காரமடையில் உள்ள டி.ஆர்.எஸ்., பிராப்ரட்டி டெவலப்பர்ஸின் உரிமையாளர் சண்முகசுந்தரம். இவர் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது, ஏழை, எளிய மக்களுக்கு, உதவிப் பொருட்கள் வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டு மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகைப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, மேட்டுப்பாளையம் நகரில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வேஷ்டி, சேலை, இனிப்பு வகைகள், மளிகை பொருட்கள் ஆகியன வழங்கினார்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள், காரமடை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, காரமடை அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். தூய்மை பணியாளர்களுக்கு சேலை, வேஷ்டி, இனிப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
டி.ஆர்.சண்முகசுந்தரத்தின் குடும்பத்தினர், 1000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் உதவி பொருட்களை வழங்கினர்.