/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நறுமண பொருள் உற்பத்தி அதிகரிக்க இலக்கு! ரூ.422.30 கோடியில் விரிவாக்க திட்டம்
/
நறுமண பொருள் உற்பத்தி அதிகரிக்க இலக்கு! ரூ.422.30 கோடியில் விரிவாக்க திட்டம்
நறுமண பொருள் உற்பத்தி அதிகரிக்க இலக்கு! ரூ.422.30 கோடியில் விரிவாக்க திட்டம்
நறுமண பொருள் உற்பத்தி அதிகரிக்க இலக்கு! ரூ.422.30 கோடியில் விரிவாக்க திட்டம்
ADDED : செப் 19, 2024 10:06 PM
பொள்ளாச்சி: 'நறுமண பொருட்களின் ஏற்றுமதி மற்றும் ஏலக்காய் உற்பத்தி திறனை அதிகரிக்க, விரிவாக்கம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது,' என, நறுமண பொருள் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நறுமணப்பொருள் வாரியம் சார்பில், நறுமண பொருட்களின் ஏற்றுமதி மற்றும் ஏலக்காய் உற்பத்தி திறனை அதிகரிக்க விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக இந்தியா முழுவதும், 15வது நிதி ஆணையத்தின் கீழ், 2025-26ம் நிதியாண்டுக்காக, 422.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நறுமண பொருட்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி, பாதுகாப்பான பொருட்களை உற்பத்தி செய்தல், புவிசார் குறியீடுள்ள நறுமண பொருட்களின் அபிவிருத்தி, புதிய தொழில் முனைவோர்களுக்கு ஆதரவு அளித்தல் போன்ற செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், வேளாண் குழுக்கள், வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வடகிழக்கு மாநிலத்தில் உள்ள ஏற்றுமதியாளர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு தருதல் போன்றவை இத்திட்டத்தில் அடங்கும்.
சிறிய மற்றும் பெரிய ஏலக்காய் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக மறு நடவு திட்டம், தரமான நடு பொருட்களை வழங்குவது, நீர்நிலைகள் அமைப்பது, காலநிலையின் அடிப்படையிலான காப்பீட்டு திட்டம், நிலையான உற்பத்திக்கான விரிவாக்க செயல்பாடுகள் இந்த புதிய திட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
நறுமண பொருட்களின் வர்த்தக மேம்பாட்டுக்காக சந்தை விரிவாக்கம், வர்த்தக அபிவிருத்தி, வர்த்தக ரீதியிலான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல், தரப்பரிசோதனைக்கான ஆய்வகங்களை அமைத்தல் போன்ற வர்த்தக விரிவாக்க செயல்பாடுகளையும் இந்த திட்டம் நிறைவேற்ற உள்ளது.
இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்துக்கு விண்ணப்பிப்போர், இன்று (20ம் தேதி) முதல் அக்., 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்கள் பெறவும், விண்ணப்பிக்கவும், நறுமண பொருட்கள் வாரியத்தின் வலைதளமான, www.indianspices.com அல்லது ஈரோடு பெரியார் நகரில் உள்ள 'ஸ்பைசஸ் போர்டு' வட்டார அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.