/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமானப்படை என்.சி.சி., துப்பாக்கி சுடுதல் பயிற்சி
/
விமானப்படை என்.சி.சி., துப்பாக்கி சுடுதல் பயிற்சி
ADDED : ஜன 02, 2025 10:09 PM
பொள்ளாச்சி; மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு, விமான மாதிரி வடிவமைத்தல், துப்பாக்கி சுடுதல், அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், -தமிழ்நாடு விமானப்படை என்.சி.சி., சார்பில் ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாம் நடந்தது.
இதில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு, விமான மாதிரி வடிவமைத்தல், துப்பாக்கி சுடுதல், அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மேலும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து விபத்து இல்லாத சூழல் ஏற்படுத்துவது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில், கமாண்டிங் அதிகாரி பர்குணன் தலைமை வகித்தனர். டாடா சன்ஸ் குழுமத் தலைவர் சந்திரசேகரன் கலந்து கொண்டார். கல்லுாரி என்.சி.சி., அலுவலர் லாவண்யா, பயிற்சி அதிகாரிகள் சதீஷ், விஷாந்த், கிரண், சசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

