UPDATED : ஜூலை 07, 2026 10:35 PM
ADDED : ஜூலை 07, 2026 10:32 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் மற்றும் கோவில்பாளையம் பகுதிகளில், வாகனங்களில் இருந்து ஏர் ஹாரன் மற்றும் கண் கூசச் செய்யும் எல்.இ.டி., பல்புகளை ரூரல் போலீசார் அகற்றினர்.
கோவை- சத்தி நெடுஞ்சாலையில் கோவில்பாளையம் எஸ்.ஐ., குணசேகரன் தலைமையில் நடந்த சோதனையில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் மற்றும் எல்.இ.டி., பல்புகளை அகற்றப்பட்டன. பத்து வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில், டி.எஸ்.பி., பாஸ்கர் தலைமையில் நடந்த சோதனையில், 12 ஏர் ஹாரன்கள் மற்றும் 35 எல்.இ.டி., பல்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
