ADDED : ஜூலை 07, 2026 10:32 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: கணேசபுரத்தில் இருந்து குருக்கம்பாளையம் செல்லும் பாதையில், தனியார் பேட்டரி தொழிற்சாலை செயல்பட்டு வந்தது ; பொதுமக்களின் போராட்டத்தால், 5 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது.
தற்போது பேட்டரி பிளாஸ்டிக் பெட்டிகளை உடைத்து தூளாக் கும் பணி நடக்கிறது. இதனால், காற்று நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து கணேசபுரம் மக்கள் கூறுகையில், ‘பேட்டரி பிளாஸ்டிக் டப்பாவை தூளாக்கும்போது அதிலிருந்து நச்சு பரவி காற்றில் கலக்கிறது. இந்த நச்சுக்காற்றை சுவாசிக்கும்போது, புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொழிற்சாலை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
