/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்களில் இருந்து ஏர் ஹாரன் பறிமுதல்
/
பஸ்களில் இருந்து ஏர் ஹாரன் பறிமுதல்
ADDED : டிச 11, 2025 06:47 AM

மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் அருகே தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த, ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, இயக்கப்படும் சில அரசு மற்றும் தனியார் பஸ்களில், அதிக சத்தம் எழுப்பும், ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.
மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார், நேற்று திடீரென பஸ் ஸ்டாண்டில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 5 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த, தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தார். பஸ்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

