/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமானப் பயணிகள் எண்ணிக்கை கோவையில் 31 சதவீதம் அதிகரிப்பு
/
விமானப் பயணிகள் எண்ணிக்கை கோவையில் 31 சதவீதம் அதிகரிப்பு
விமானப் பயணிகள் எண்ணிக்கை கோவையில் 31 சதவீதம் அதிகரிப்பு
விமானப் பயணிகள் எண்ணிக்கை கோவையில் 31 சதவீதம் அதிகரிப்பு
ADDED : மார் 28, 2025 10:13 PM
கோவை; கடந்த பிப்.,யில் கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டை விட, 31 சதவீதம் அதிகரித்துள்ளது.
கோவை, விமான நிலையத்தில் இருந்து தினமும், சராசரியாக 30 விமானங்களின் சேவை வழங்கப்படுகிறது.
உள்நாட்டு விமான சேவை மற்றும் வெளிநாடுகளுக்கான நேரடி விமான சேவையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்., மாதம் கோவை விமான நிலையத்தில் இருந்து, 179 சர்வதேச விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது முந்தைய ஆண்டின், இதே காலகட்டத்தை விட, 66 சதவீதம் அதிகமாகும். அதேபோன்று 1,651 உள்நாட்டு விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இது, முந்தைய ஆண்டை விட, 18 சதவீதம் அதிகம்.
பயணிகளின் எண்ணிக்கை, சர்வதேச விமானப் பயணிகளின் எண்ணிக்கை, 23 ஆயிரத்து 641 ஆக இருந்தது. இது, 48 சதவீதம் அதிகம்.
உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை, 2 லட்சத்து 57 ஆயிரத்து 37 ஆக இருந்தது. ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டை விட, 66 ஆயிரத்து 791 பயணிகள் அதிகரித்துள்ளது.
சரக்குப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, வெளிநாடுகளுக்கான சரக்குகள் 105 சதவீதம் அதிகரித்து, 180.1 டன்னாக இருந்தது. உள்நாட்டு சரக்குப் போக்குவரத்து 764 டன்னாக இருந்தது.
கோவை விமான நிலைய சேவையை, பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, நடப்பு நிதியாண்டில் 30 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

