ADDED : அக் 23, 2024 12:43 AM
அ நிறம் | அளவு
கோவை : கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், பணியிட மாறுதலில் செல்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள, விமானப் போக்குவரத்து பயிற்சி மையத்தின் தலைமை பயிற்சியாளர் மற்றும் விமானப் போக்குவரத்து மேலாண்மை பொதுமேலாளராக, செந்தில் வளவன் பொறுப்பேற்கிறார்.
கோவை விமான நிலையத்துக்கு, புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை, சம்பத்குமார் பொறுப்பு இயக்குனராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
