/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.ஐ.டி.யு.சி., அமைப்பு தினவிழா கொண்டாட்டம்
/
ஏ.ஐ.டி.யு.சி., அமைப்பு தினவிழா கொண்டாட்டம்
ADDED : நவ 01, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தின், 106வது அமைப்பு தினவிழா, காட்டூரில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி., சங்க அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் ஆறுமுகம் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து, தொழிற்சங்க வரலாறு குறித்து உரையாற்றினானர்.
கோவை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., கவுன்சில் செயலாளர் தங்கவேல், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சிவசாமி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சாந்தி சந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஜேம்ஸ், குணசேகர், தங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

