ADDED : அக் 10, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாநில அளவில் தொழிலாளர்களுக்கான கொள்கை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கோவையில் ஏ.ஐ. டி.யு.சி. தொழிற்சங்கம் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
தலைமை வகித்த ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் ஆறுமுகம், ''நிரந்தர வேலைக்கு, நிரந்தர தொழிலாளி என்பது இன்றைக்கு இல்லை. பெரும்பாலும் கான்ட்ராக்ட் முறையும், அவுட்சோர்சிங் முறையும்தான் பின்பற்றப்படுகிறது. இதனால், தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே தான், மாநில அளவில் தொழிலாளர்களுக்கான புதிய கொள்கை உருவாக்க வேண்டும் என்கிறோம்.'' என பேசினார்.
மாவட்ட கவுன்சில் செயலாளர் தங்கவேல், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.