/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசுக்கு ஏ.ஐ.டி.யு.சி., கோரிக்கை
/
அரசுக்கு ஏ.ஐ.டி.யு.சி., கோரிக்கை
ADDED : ஏப் 16, 2025 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாவட்டத்தில் சோமனுார், அவிநாசி, புதுப்பாளையம், கண்ணம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் உள்ளனர். இவர்கள், புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 11ம் தேதி முதல், சோமனுாரில் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக, ஏ.ஐ.டி.யு.சி., மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழக அரசு தலையிட்டு, விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.