/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகில பாரத பிராமணர் சங்கம் சார்பில் மகளிருக்கு விருது வழங்கி கவுரவம்

ADDED : மார் 18, 2024 12:53 AM

கோவை;சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு, கல்வி மற்றும் மருத்துவ சேவை செய்த மகளிரை பாராட்டி, அகில பாரத பிராமணர் சங்கத்தின் மகளிர் அணி சார்பில், மகளிர் தின சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
கோவை, வேலாண்டிபாளையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், கல்வி மற்றும் மருத்துவத்திற்கு நிதி உதவி செய்து வரும், 82 வயதான காமாட்சி மாமியின் சேவையைப் பாராட்டி, 'விமன் ஆப் இன்ஸ்பிரேஷன்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மகளிர் அணியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி கவுசல்யாவுக்கு, 'சிறந்த பெண்மணி' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதை, அகில பாரத பிராமணர் சங்கத்தின் தேசிய செயலாளர் ராமசுந்தரம் மற்றும் அகில பாரத மகளிர் அணியின் மாநில செயலாளர் கல்யாணி இணைந்து வழங்கினர்.
மகளிர் அணியை சேர்ந்த மகளிர் ஒவ்வொருவரும், தத்தம் வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த உணவை, பகிர்ந்து உண்டு மகளிர் தின விழாவை கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில், அகில பாரத பிராமணர் சங்க பொருளாளர் கணபதி சுப்ரமணியன், கோவை துணை தலைவர்கள் முரளிதரன், வெங்கட்ரமணி மற்றும் கோவை மாவட்ட மகளிர் அணியின் சார்பில் பலர் பங்கேற்றனர்.