/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிரம்பி ததும்பும் அக்காமலை செக்டேம்: கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது
/
நிரம்பி ததும்பும் அக்காமலை செக்டேம்: கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது
நிரம்பி ததும்பும் அக்காமலை செக்டேம்: கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது
நிரம்பி ததும்பும் அக்காமலை செக்டேம்: கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது
ADDED : ஜன 28, 2024 08:56 PM

வால்பாறை:மழைப்பொழிவு குறைந்த நிலையிலும், அக்காமலை செக் டேம் நிரம்பிய நிலையில் காணப்படுவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறை நகர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை செக்டேம், கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
நகரிலிருந்து 8 கி.மீ., துாரம் வரை குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, நகர் பகுதி மக்களுக்கு மூலிகை மணம் நிறைந்த குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
மலைச்சரிவிலிருந்து இயற்கையாக வரும் மழை நீரை சேமித்து வைத்து, நகராட்சி சார்பில் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
வால்பாறையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்குப்பருவ மழையின் போது, அக்காமலை செக் டேம் ஆக., மாதம் நிரம்பியது.
இந்நிலையில், அங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, மழைப்பொழிவு குறைந்து பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், அக்காமலை செக் டேம் நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதால், வால்பாறை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை நகர் பகுதி மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் செக் டேமில் உள்ளது. இதனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. புதிய குடிநீர் குழியாய் அமைக்கும் பணி நடப்பதால், மக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என்றனர்.