/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அக்சயா கல்லுாரி ஆண்டுவிழா உற்சாகமாக கொண்டாட்டம்
/
அக்சயா கல்லுாரி ஆண்டுவிழா உற்சாகமாக கொண்டாட்டம்
ADDED : மே 19, 2025 11:54 PM

கோவை; கிணத்துக்கடவில் அமைந்துள்ள, அக்சயா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் ஆண்டு விழா, கல்லுாரி கலையரங்கில் நடந்தது. கல்லுாரியின் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
சிறந்த மாணவர்களுக்கான விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கல்லுரியில் நடைபெற்ற, 'டெக் டே' போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட, சிறந்த ஆய்வுத்திட்டங்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரியில் பல்வேறு மன்றங்களின் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கல்லுாரியின் அறங்காவலர் தியாகராஜன், தலைமை நிர்வாக அதிகாரி கபிலன், கல்லுாரியின் ஆலோசகர் ஜோசப் சேவியர், முதல்வர் ரவீந்தரன், துணை முதல்வர் சிவசங்கரி மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.