/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூம்புகாரில் அட்சய திருதியை கண்காட்சி விற்பனை
/
பூம்புகாரில் அட்சய திருதியை கண்காட்சி விற்பனை
ADDED : ஏப் 30, 2025 12:18 AM

கோவை,; கோவை பெரியகடை வீதியில் உள்ள, பூம்புகார் விற்பனை நிலையத்தில், அட்சய திருதியை முன்னிட்டு, கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது.
தினமும் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், ஐம்பொன் நகைகள், மர வளையல்கள், நூக்கமர விநாயகர் சிலைகள், மணப்பலகைகள், சாமி சிலைகள் வைக்கும் மண்டபங்கள், இயற்கை காட்சிகள் கொண்ட பேனல்கள், யானைகள், ஊஞ்சல்கள், சோபா செட், உணவருந்தும் மேசை செட், சந்தன மர சிலைகள், பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இன்று (ஏப்., 30) நிறைவடையும் இக்கண்காட்சியில், அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

