/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவில் மகா உற்சவம்
/
ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவில் மகா உற்சவம்
ADDED : ஜன 16, 2025 11:55 PM

போத்தனூர்; கோவை, பிச்சனூரிலுள்ள ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவிலில் மகா உற்சவம் நடந்தது.
வேலந்தாவளம் செல்லும் சாலையில் ரங்கசமுத்திரம் பிரிவு அருகேயுள்ள கோவிலில் இவ்வாண்டுக்கான மகா உற்சவம் கடந்த 14ல் சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கி இரு நாட்கள் நடந்தது. அன்று மாலை முதல் விவசாயிகள் தங்களது வளர்ப்பு பசு மாடுகளிலிருந்து கறந்த பாலை கொண்டு வந்து, மாதேஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்தனர். நேற்று இரவு வரை இந்நிகழ்ச்சி நடந்தது.
மேலும் நேர்த்திக்கடனாக குழந்தைகள், வளர்ப்பு பிராணிகளின் உருவங்களை (மண்ணால் செய்த) படைத்து வழிபட்டனர்.
இதில் கேரள மாநிலம் மேனாம்பாறை, எருத்தேன்பதி, வேலந்தாவளம் மற்றும் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் திரளாக பங்கேற்றனர். மதியம் விருந்து வழங்கப்பட்டது. இன்று தீர்த்தவாரி நடக்கிறது. நாளை தரிசனத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ஜெகனாத சுவாமி செய்திருந்தார்.