/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படிப்பை தாண்டி திறமை அசத்தும் 'அல்கெமி'
/
படிப்பை தாண்டி திறமை அசத்தும் 'அல்கெமி'
ADDED : செப் 25, 2025 12:34 AM

அ ல்கெமி பப்ளிக் பள்ளியில், படிப்பை தாண்டி தனித்திறமைகளை வளர்க்கும் வகையில் பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:
எங்கள் பள்ளி, 2012 முதல் கல்வி மற்றும் இணைப் பாடத்திட்ட செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதோடு, ரோபோட்டிக்ஸ், கிரீடோ மாண்டிசோரி கல்வி, மேற்கத்திய நடனம், இசைக் கருவிகள், ஸ்கேட்டிங், சிலம்பம் போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். மாணவர்கள் மாவட்ட, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்க்கின்றனர்.
எதிர்காலத்திற்கு தேவையான செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜே.இ.இ., மற்றும் 'நீட்' போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம். கல்வி, கலை, விளையாட்டு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதே எங்கள் முக்கிய நோக்கம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.