/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியார் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள்; கமிஷனர் ஆய்வு
/
ஆழியார் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள்; கமிஷனர் ஆய்வு
ஆழியார் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள்; கமிஷனர் ஆய்வு
ஆழியார் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள்; கமிஷனர் ஆய்வு
ADDED : மே 04, 2025 12:53 AM

கோவை: குறிச்சி, குனியமுத்துார் பகுதிகளுக்கான ஆழியாறு கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட குறிச்சி, குனியமுத்துார் ஆகிய பகுதிகளில் உள்ள ஆறு வார்டுகளுக்கு, ஆழியார் கூட்டு குடிநீர் வாயிலாக, 7.80 எம்.எல்.டி., குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கோவை பொள்ளாச்சி, ஆழியார் ஆற்றில் அம்பராம்பாளையம் நீருந்து நிலையத்தில் இருந்து, தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நேற்று அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள நீருந்துநிலையம், ஆத்துப்பொள்ளாச்சி நீர் சுத்திகரிப்பு நிலையம், பொள்ளாச்சி ரோடு, ஆச்சிபட்டி பகுதிகளில் சேதமடைந்த பிரதான குழாய்கள் சீரமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
தலைமை பொறியாளர் விஜயகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் பட்டன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.