/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனைத்து புற்றுநோயையும் குணப்படுத்தலாம்! கருத்தரங்கில் டாக்டர்கள் நம்பிக்கை
/
அனைத்து புற்றுநோயையும் குணப்படுத்தலாம்! கருத்தரங்கில் டாக்டர்கள் நம்பிக்கை
அனைத்து புற்றுநோயையும் குணப்படுத்தலாம்! கருத்தரங்கில் டாக்டர்கள் நம்பிக்கை
அனைத்து புற்றுநோயையும் குணப்படுத்தலாம்! கருத்தரங்கில் டாக்டர்கள் நம்பிக்கை
ADDED : செப் 30, 2024 11:06 PM
பொள்ளாச்சி : அனைத்து விதமான புற்றுநோய்களையும் எவ்வித பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்த முடியும் என, டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மிராக்கல் ஒருங்கிணைந்த மருத்துவ மையம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ மத்திய ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் புற்றுநோய் சிகிச்சை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
பொள்ளாச்சி மிராக்கள் ஒருங்கிணைந்த மருத்துவ மையத்தில் நடந்த கருத்தரங்கில், கோவை, ஈரோடு, சேலம் சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவக் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த டாக்டர்கள் என, 230 பேர் பங்கேற்றனர். மிராக்கள் ஒருங்கிணைந்த மருத்துவ மைய நிறுவனர் மாணிக்கம் தலைமை வகித்தார்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவ மத்திய ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ராகவேந்திராராவ் பேசுகையில், ''மத்திய அரசும், மிராக்கள் ஒருங்கிணைந்த மருத்துவமனையும் இணைந்து புற்றுநோய் குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது,'' என்றார்.
இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. தொடர்ந்து, மிராக்கல் ஒருங்கிணைந்த மையத்தில் நடைபெற்று வரும் புற்றுநோய் சிகிச்சை குறித்து விவாதித்தனர். அனைத்து விதமான புற்றுநோய்களையும் எவ்வித பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்தும் முறைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்தனர்.
ஓசோன் நிறுவனத்தின் தலைவர் மில்லிஷா, ஆர்.கே., இயற்கை மருத்துவமனை முதன்மை மருத்துவர் சரண்யன், உடுமலை அரசு டாக்டர் ராகவேந்திரசாமி உட்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, மிராக்கல் மேலாளர் ரமேஷ்குமார், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் பி.ஆர்.ஓ., நாகராஜன் ஆகியோர் செய்தினர்.