/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 24, 2024 01:38 AM

கோவை;கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுசுகாதார துறை அனைத்து சங்க சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை ரேஸ்கோர்ஸ் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஊழியர்கள் மீதான மிரட்டல் போக்கை கைவிட வேண்டும், அறிக்கைகளை வழங்க உரிய கால அவகாசம் வழங்க வேண்டும், சார்பு துறைகள் வாயிலாக செய்யப்பட வேண்டிய சுகாதாரப்பணிகளில், உள்ள பிரச்னைகளை தீர்க்க சுகாதார துறை துணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில கொள்கை பரப்பு செயலாளர் கண்ணப்பன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு சங்கங்களை சேர்ந்த, சுகாதார துறை ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

