/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகில இந்திய கூடைப்பந்து; கோவை மாணவர்கள் 'சபாஷ்'
/
அகில இந்திய கூடைப்பந்து; கோவை மாணவர்கள் 'சபாஷ்'
ADDED : நவ 24, 2024 11:49 PM

கோவை; அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற, கோவை ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பள்ளி கல்வித்துறை சார்பில், 68வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள், சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நந்தகனில், கடந்த, 18 முதல் 22ம் தேதி வரை நடந்தது.
நடப்பு, 2024-25ம் ஆண்டுக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்யும் விதமாகவும் இப்போட்டி நடத்தப்பட்டது.
இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து, 33 அணிகள் பங்கேற்றன. காலிறுதியில், பஞ்சாப் அணியையும், அரை இறுதியில் டில்லி அணியையும், தமிழ்நாடு அணி வென்றது. இறுதிப் போட்டியில் சத்தீஸ்கர் மாநில அணியுடன், 58-48 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவி இரண்டாம் இடம் பிடித்தது.
தமிழக அணியில் கோவை ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்கள் ஹேமந்த், விஷால் முரளி பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இம்மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் செலின் வினோதினி, பயிற்சியாளர் கனகராஜ், சக மாணவர்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.