/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு
பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு
பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு
ADDED : ஜூலை 14, 2025 11:35 PM
கோவை; பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கத்தின், அகில இந்திய 11வது மாநாடு வரும் 22, 23ம் தேதிகளில் நடக்கிறது.
கோவை வரதராஜபுரம் ஸ்ரீ சாய் விவாகா மஹாலில் நடக்கும் மாநாட்டில், பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க, அகில இந்தியா பொதுச் செயலாளர் அபிமன்யு, அகில இந்திய தலைவர் அனிமேஷ் மித்ரா, மாநில தலைவர் சவுந்தரராஜன் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
இதில், பி.எஸ்.என்.எல்., 4ஜி சேவையை விரைவாக வழங்க வேண்டும். பைபர் கேபிள் சேவையை தரமாக வழங்க வேண்டும்; அவுட் சோர்சிங் முறையை கொண்டு வரக்கூடாது; பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் கொண்டு வர வேண்டும்; பி.எஸ்.என்.எல்., பொதுத்துறையாக நீடிக்க வேண்டும் என்பன உட்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன.