/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகில இந்திய பல்கலை கிக் பாக்ஸிங்; அவிநாசிலிங்கம் மாணவியர் சாம்பியன்
/
அகில இந்திய பல்கலை கிக் பாக்ஸிங்; அவிநாசிலிங்கம் மாணவியர் சாம்பியன்
அகில இந்திய பல்கலை கிக் பாக்ஸிங்; அவிநாசிலிங்கம் மாணவியர் சாம்பியன்
அகில இந்திய பல்கலை கிக் பாக்ஸிங்; அவிநாசிலிங்கம் மாணவியர் சாம்பியன்
ADDED : மார் 15, 2024 12:54 AM

கோவை;மீரட் நகரில் நடந்த அகில இந்திய பல்கலை கிக்பாக்ஸிங் போட்டியில் அவிநாசிலிங்கம் பல்கலை அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
அகில இந்திய பல்கலைகளுக்கு இடையேயான மாணவ - மாணவியர் பிரிவு கிக்பாக்ஸிங் போட்டி மீரட் நகரில் உள்ள சுவாமி விவேகானந்த் சுபர்தி பல்கலையில் நடந்தது.
இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மத்தியபிரதேசம், உத்தர பிரதேசம், டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இப்போட்டியில், கோவை அவிநாசிலிங்கம் பல்கலை மாணவியர் பங்கேற்று ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, எட்டு வெண்கலப்பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவியர்
ரூபிகா கண்ணன் 70+ கிலோ பிரிவில் தங்கம், 56 கிலோ எடைப்பிரிவில் ராஜேஸ்வரி, 60 கிலோ எடைப்பிரிவில் திவ்யா ஆகியோர் வெள்ளி, 48 கிலோ எடை பிரிவில் ரூபிகா, 70 கிலோ பிரிவில் ரித்திகா, 70+ பிரிவில் சர்மிளா, 60 கிலோ பிரிவில் அமீசா செரின், 70 கிலோ பிரிவில் வெண்மதி, சங்கீதா, ஹனி கேத்தரின், 70+ பிரிவில் திவ்யா ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவியருக்கு அவிநாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், பதிவாளர் கவுசல்யா, டீன் இந்து, உடற்கல்வித்துறையினர் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

